பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 1,591 ஆக சற்று அதிகரித்துள்ளது: 1,537 பேர் நலம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,580 -ல் இருந்து 1,591 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,537 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,52,296 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,591 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,580 -ல் இருந்து 1,591 ஆக சற்று அதிகரித்துள்ளது. 27 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,537 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,52,296 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 1,591 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,45,27,080 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 901 பேர் ஆண்கள், 690 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,39,499 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,97,473 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,537 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,85,244 ஆக உயர்ந்துள்ளது.

27 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,217 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


சென்னை



சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக இருந்த நிலையில் இன்று (14ம் தேதி) 212 ஆக அதிகரித்துள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
15-செப்-202106:23:30 IST Report Abuse
Narayanan அடுத்து வரும் ஹிந்துக்களின் பண்டிகைகளான விஜயதசமி மற்றும் தீபாவளியை தடுக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி காட்டப்படுகிறது . ஒருபத்திரிக்கையாளர் நைனார் நாகேந்திரனிடம் ஒரு கேள்வி கேட்கிறார் உத்தரபிரதேசத்திலும் விநாயகர்சதுர்த்திக்கு தடைவிதித்து இருக்கிறார்களே என்று . இந்த நைனார் நாகேந்திரன் இப்படி பதில் சொல்லியிருக்க வேண்டும் மும்பையில் தமிழகத்தைவிட கொரோனா பாதிப்பு இருந்தாலும் தடையில்லையே என்று . உத்திரபிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறதே என்று . அந்த நிருபர் திமுகவின் கைக்கூலி . அவன் இவரை மடக்கிவிட்டதாக ஒரு நையாண்டித்தனமான சிரிப்புவேறு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X