சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

முடிவு இல்லையா?

Added : செப் 14, 2021
Share
Advertisement
முடிவு இல்லையா?'மம்தாவின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக, அவரது கட்சி நிர்வாகிகள் செய்யும் சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த சட்டசபை தேர்தலில், நந்திகிராமில் தோல்வி அடைந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதாவது ஒரு

அக்கம் பக்கம்


முடிவு இல்லையா?


'மம்தாவின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக, அவரது கட்சி நிர்வாகிகள் செய்யும் சேட்டைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த சட்டசபை தேர்தலில், நந்திகிராமில் தோல்வி அடைந்தார். ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்; இல்லையெனில் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது. இதனால் இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார் மம்தா.
தங்கள் கட்சியின் தலைவியே போட்டியிடுவதால், மேற்கு வங்க அமைச்சர்கள் பலரும் ஒருவித பதற்றத்தில் உள்ளனர்; அனைவரும் பவானிபூரில் முகாமிட்டுள்ளனர். தெருத்தெருவாக சென்று பிரசாரம் செய்கின்றனர். சில அமைச்சர்கள் 'பெயின்ட்' டப்பாவுடன், சுவர்களை தேடி அலைகின்றனர். மேலும் சிலர், பிரசார வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தபடி, 'வாக்காளப் பெருமக்களே... மறந்து விடாதீர்கள்' என, 'கரகர' குரலுடன் ஒலிபெருக்கியில் கூவுகின்றனர். இதுவரை வாகனங்களே வராத பவானிபூரில் உள்ள பல கிராம சாலைகளில், அமைச்சர்களின் சொகுசு கார்கள் புழுதியை பறக்கவிட்டுச் செல்கின்றன. குடிசை குடிசையாக சென்று கஞ்சி குடித்து, ஏழைக் குழந்தைகளின் மூக்கை துடைத்து, வயது பேதமின்றி பெரிசு முதல் சிறிசு வரை அனைவரது கால்களிலும் 'பொத் பொத்' என விழுந்து எழுந்து, பிரசாரம் செய்கின்றனர். மேற்கு வங்க மக்களோ, 'ஆண்டவா... இதுக்கு ஒரு முடிவு இல்லையா...' என, புலம்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X