சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வாழ்த்து கூறி வரவேற்போம்!

Added : செப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாழ்த்து கூறி வரவேற்போம்!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது. இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி


வாழ்த்து கூறி வரவேற்போம்!மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது. இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார். கேரளாவில் பணியாற்றியதால், அண்டை மாநிலமான தமிழகத்தை பற்றியும் நன்கு அறிந்திருப்பார்.
மத்திய புலனாய்வு துறையில் ஊழல், 'மாபியா'க்களுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். நாகாலாந்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்.பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இலங்கையில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக
அமையும்.இந்த சூழலில் பாதுகாப்பு மற்றும் உளவு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
'கவர்னர் ஆர்.என்.ரவி, ஆளுங்கட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவார்' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறுகிறார்.ஒருவரை பார்த்து பழகும் முன்பே இப்படி எதிர்மறை கருத்துக்களை வெளியிடுவது, ஒரு தலைவருக்கு அழகல்ல. முதல்வர் ஸ்டாலின் இது பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அவர் மனதில் குழப்பத்தை உண்டாக்கவே, அழகிரி இப்படி சொல்கிறாரோ என, எண்ண தோன்றுகிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய கவர்னர் உதவட்டும். அவரை திறந்த மனத்துடன் வாழ்த்து கூறி வரவேற்போம்!


இனி ஒரு விதி செய்வோம்!எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட கழக அரசுகளுக்கு யாருக்காவது சிலை வைக்காமல் போனால் தலைவெடித்து போய்விடுமோ என்னவோ!அ.தி.மு.க., என்றால் எம்.ஜி.ஆர்., சிலை; தி.மு.க., என்றால் கருணாநிதி, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., ஆகியோருக்கு ஊருக்கு ஊர் சிலை அமைப்பதும், அதை பாதுகாப்பதும் பெரிய மண்டையிடி ஆகிவிட்டது.
எங்கேயாவது, விஷமி யாராவது, ஏதாவது ஒரு சிலையை அவமானப்படுத்துவது போல் செய்து விட்டால் போச்சு. தமிழகத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்.அதன் பின் நிலைமையை சரி செய்ய, அரசு இயந்திரத்தின் நேரம், உழைப்பு, நிதி அனைத்தும் செலவிட வேண்டும். இதை யார் தட்டி
கேட்பது?ஏற்கனவே ஒவ்வொரு தமிழன் மீதும், 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை உள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் 39 கோடி செலவில் கருணாநிதிக்கும், எங்கோ ஒரு இடத்தில் 100 கோடி ரூபாயில் ஈ.வெ.ரா.,விற்கு சிலையும் தேவையா?
இவர்களின் அறிவாலயம், உண்மையில் பண ஆலயம் தானே... 'பெரியார்' அறக்கட்டளையில் இல்லாத பணமா? அங்கே கொட்டிக்கிடக்கும் பணத்தில் தி.மு.க., கட்சி அலுவலகங்களிலும், தஞ்சை பெரியார் - மணியம்மை கல்லுாரி வளாகத்திலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டுமே... யார் வேண்டாம் என்றது?சிலை விஷயத்தில், இனி ஒரு விதி செய்வோம்!இனி எந்த சிலைக்கும், நினைவிடத்திற்கும் அரசு, இடமோ, நிதியோ அளிக்க கூடாது. விரும்புவோர், தங்கள் சொந்த
பணத்தில், அரசின் அனுமதி பெற்று, தனியார் இடத்தில் அமைத்து கொள்ளலாம்.சிலை விஷயத்தில் ஏதாவது சட்டம் - ஒழுங்கு பிரச்னை வந்தால், சம்பந்தப்பட்ட தனி நபரோ, அமைப்போ பொறுப்பேற்க வேண்டும்.நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் நினைவை போற்ற வேண்டுமனில், அவர்களின் பெயரில் மொழி, வேளாண், கிராம தொழில் ஆராய்ச்சி கூடங்கள் அமைப்பதே சிறந்தது.திருவாரூரில் கருணாநிதி பெயரில் இயற்கை கனி வகை ஆராய்ச்சி மையமும், ஈரோடில், பெரியார் வெங்காய ஆராய்ச்சி மையமும் அமைக்கலாமே!


தி.மு.க.,எனும் மாமியார்!ரா.கீர்த்தி ப்ரியன், துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் 5.70 லட்சம் கோடி ரூபாய் என வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, 'நாங்கள் ரொம்ப யோக்கியர்கள்' என பெருமைப்பட்டது தி.மு.க., அரசு.
ஆனால், அடுத்த சில நாட்களில் வெளிவந்த தமிழக அரசின் பட்ஜெட், தி.மு.க.,வின் உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது என்பதே நிஜம்.
தி.மு.க.,வின் செயல், பிச்சைக்காரன் கதையை நினைவுபடுத்துகிறது.பிச்சை கேட்டு வந்த பிச்சைக்காரனை, 'ஒண்ணுமில்லை... போ' - என, மருமகள் விரட்டினாளாம். அப்போது வந்த மாமியார், 'அந்த வீட்டுல என்ன பா சொன்னாங்க...' என,
பிச்சைக்காரனிடம் விசாரித்தார்.அவனும் ஏதோ பிச்சை பெரிசா கிடைக்கப் போகுது என நினைத்து, 'ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்க தாயி...' என்றான்.
இதை கேட்ட மாமியார், 'அவள் அப்படியா சொன்னாள்...'- என ஆத்திரத்துடன் கேட்டு, 'சரி நீ இங்கே வா...' என, வீட்டின் வாசலுக்கு பிச்சைக்காரனை அழைத்து வந்தாள்.'அவள் என்ன சொல்றது? இந்த வீட்டுல எனக்கு தான் உரிமை இருக்கு... நான் சொல்றேன்... பிச்சையும் கிடையாது, ஒண்ணும்
கிடையாது போ' என்றாளாம்.அந்த மாமியார் போல இருக்கிறது, தி.மு.க., அரசு.அ.தி.மு.க., அரசு தான் கடன் வாங்கி, தமிழகத்தை தள்ளாடச் செய்தது என்றால், தி.மு.க.,வும் அதையே தான் செய்கிறது.சென்னையில் 2,500 கோடி ரூபாயில் நான்கு பூங்காக்கள், மதுரையில் 70 கோடி ரூபாய்
மதிப்பில் நுாலகம் மற்றும் சிலை அமைத்தல், மணி மண்டபம் கட்டுதல் என, தி.மு.க., அரசு தேவையில்லாத திட்டங்களை அறிவித்து வருகிறது.
தமிழக அரசின் கடனை, எந்த ஆட்சியும் அடைக்கப் போவதில்லை. மேலும் கடன் வாங்கி தான், 'மக்கள் நலத் திட்டம்' என்ற பெயரில் கொள்ளை அடிக்கப் போகின்றனர்.
இதில், 'வெள்ளை அறிக்கை, கறுப்பு அறிக்கை' என ஏன் 'காமெடி' செய்ய வேண்டும்?

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-செப்-202115:30:21 IST Report Abuse
D.Ambujavalli நிதி அமைச்சர் இந்த மூன்று மாத வரவு செலவுக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, இந்தக்குருகிய காலத்தில் மக்கள் கடன் எவ்வளவு ஏறி உள்ளது, எந்தெந்த செலவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறட்டுமே அதை செய்வாரா, செய்ய விடுவாரா முதல்வர் ? அவருக்கு மட்டும் நிதி நிலை தெரியாதா? ஆனாலும் தெரிந்தே அனாவசிய அறிவிப்புகளை செய்வதன் மூலம் பொறுப்பின்மையித் தான் வெளிப்படுத்துகிறார்
Rate this:
Cancel
R VENKATARAMANAN - Chennai,இந்தியா
15-செப்-202108:40:28 IST Report Abuse
R VENKATARAMANAN தி மு க வில் ஒருத்தனும் மறைந்த தலைவர்கள் உள்பட பிறகும் போதே வசதியானவனாக பிறக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இவர்கள் அனைவரது அசையும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசியலுக்கு வந்த பிறகே கொள்ளையடித்ததுதான். பாடிய வாயும் ஆடியகாலும் சும்மா இருக்காது என்ற வசனத்தைப் போல், பத்து வருடம் ஆட்சியில் இல்லாமல் எதையும் சம்பாதிக்க வழியில்லாமல் கைகள் நமச்சல் எடுத்துக் கொண்டிருக்கும்.. தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன் விட்டது எல்லாம் எடுத்துவிட துடிக்கிறர்கள். ஆகையால் புது கவர்னர் வருகை எப்படி இருக்கும் என்று அச்சப்படுகிறர்ர்கள். புது கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன் தற்போது ஆலபவர்களின் பழைய நடவடிக்கை கலையம் தற்போது நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். லஞ்சம் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும்.
Rate this:
ganesh - chennai,இந்தியா
15-செப்-202112:06:49 IST Report Abuse
ganeshஅண்ணா தி மு க வில் சம்பாதிக்கல மக்கள் சகிக்காத அளவுக்கு லஞ்சம் ல ஊறுனது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X