சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
டெல்டாவை தடுக்கும் தடுப்பூசிஅமெரிக்காவில் 'டெல்டா' உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 'டெல்டா' கொரோனா உச்சத்தில் இருந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் 32 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மற்றவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவமனை அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிப்

டெல்டாவை தடுக்கும் தடுப்பூசி

அமெரிக்காவில் 'டெல்டா' உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 'டெல்டா' கொரோனா உச்சத்தில் இருந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் 32 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மற்றவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவமனை அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிப் பதற்கு 5 - 7 மடங்கு வாய்ப்பு அதிகம் என தெரியவந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் டெல்டாவுக்கு எதிராக மாடர்னா 95%, பைசர் 80%, ஜான்சன் அண்ட் ஜான்சன் 60% செயல்திறனுடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்



தேசிய இன்ஜினியர் தினம்

நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதில் இன்ஜினியர்களின் பணி மகத்தானது. இந்தியாவின் புள்ளியியல் நிபுணர் மற்றும் சிவில் இன்ஜினியருமான கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினமான செப்.15 தேசிய இன்ஜினியர்கள் தினமாக கடை பிடிக்கப் படுகிறது. 1955ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மத்திய, மாநில அரசின் சில கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையை கட்டிய தலைமை இன்ஜினியர் இவரே. நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளில் இவரது உழைப்பு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X