யோகியின் சர்ச்சைப் பேச்சு; யோகியை விமர்சித்த ராகுலுக்கு பதிலடி | Dinamalar

யோகியின் சர்ச்சைப் பேச்சு; யோகியை விமர்சித்த ராகுலுக்கு பதிலடி

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (13)
Share
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அவ்வப்போது பாஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் காங்கிரஸ் எம்பி ராகுலுக்கும் கருத்து மோதல் ஏற்படுவது வழக்கம். இதேபோல தற்போது மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் பாஜ.,விடம் தோற்றது. இதனை அடுத்து யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவி ஏற்றார்.பதவியேற்ற நாள்முதலே

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அவ்வப்போது பாஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் காங்கிரஸ் எம்பி ராகுலுக்கும் கருத்து மோதல் ஏற்படுவது வழக்கம். இதேபோல தற்போது மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.



latest tamil news




கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த சமாஜ்வாடி கட்சி சட்டமன்ற தேர்தலில் பாஜ.,விடம் தோற்றது. இதனை அடுத்து யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவி ஏற்றார்.
பதவியேற்ற நாள்முதலே சமாஜ்வாடி கட்சியை பிரச்சாரங்களின்போது யோகி விளாசத் தொடங்கினார். சமீபத்தில் மக்களிடையே உரையாற்றிய யோகி, 'உ.பியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியின்போது அப்பா என்று ஆட்சியாளர்களை அழைப்போருக்கு மட்டுமே உணவு மானியங்கள் கிடைக்கும்' என்று அகிலேஷ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை விமர்சித்திருந்தார். அவர் பேசிய இந்த கருத்து சர்ச்சைக்குள்ளானது.


latest tamil news




ராகுலுக்கு பதிலடி



இதனைத்தொடர்ந்து ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் 'வெறுப்பை பரப்புபவர் எவ்வாறு யோகியாக இருக்க முடியுமா?' என ஓர் பதிவு இட்டிருந்தார். இதற்கு யோகியின் ஆதரவாளர்கள் தற்போது பதில் பதிவு இட்டுள்ளனர். ராகுலை இந்திய அரசியலில் யாருமே முக்கியமாக நினைக்கவில்லை என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X