பொது செய்தி

இந்தியா

பெண்கள் பாதுகாப்பிற்கு மும்பை போலீசில் சிறப்பு 'நிர்பயா படை'

Updated : செப் 16, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை,: மும்பையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் 'நிர்பயா படை' என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மும்பை புறநகர் பகுதியான சகினாகாவில் கடந்த வாரம் ஒரு பெண் டெம்போ வாகனத்தில் பாலியல்
மும்பை பெண்கள் பாதுகாப்பு, போலீஸ், சிறப்பு  நிர்பயா படை

மும்பை,: மும்பையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் 'நிர்பயா படை' என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு
இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.மும்பை புறநகர் பகுதியான சகினாகாவில் கடந்த வாரம் ஒரு பெண் டெம்போ வாகனத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்.பின் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து மும்பையில் பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போலீசில் 'நிர்பயா படை' உருவாக்கப்பட்டிருக்கிறது.இது குறித்து மும்பை காவல் துறை அறிக்கை:மும்பையில் பணி, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 'மொபைல் போன்' மற்றும் 'இ - மெயில்' மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த, நிர்பயா படை என்ற தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் 'நிர்பயா பதக்' என அழைக்கப்படும் ஐந்து ரோந்து வாகனங்கள் வழங்கப்படும். இப்பிரிவிற்கு பெண் போலீஸ் உதவி கமிஷனர் அல்லது இன்ஸ்பெக்டர் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார்.ஒவ்வொரு நிர்பயா படையிலும் ஒரு பெண் எஸ்.ஐ., தலா ஒரு பெண் மற்றும் ஆண் கான்ஸ்டபிள் மற்றும் டிரைவர் பணியில் இருப்பார். இப்பிரிவில் தேர்வு செய்யப்படுவோருக்கு, இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202106:49:31 IST Report Abuse
Kasimani Baskaran என்னதான் படை அமைத்தாலும் கீழ்ப்புத்தியுள்ளவர்களை திருத்துவது சிரமம். ஆகவே பெண்ணுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை வீட்டிலிருந்து நல்லொழுக்கத்தில் ஒரு பகுதியாக சிறு வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X