புதுடில்லி :'உலகெங்கும், பல்வேறு சர்வதேச அரங்கிலும் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்தியில் தான் பேசுகிறார். ஹிந்தியில் பேசுவதற்கு சங்கடப்படும், கூச்சப்படும் காலம் மலையேறிவிட்டது' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.
வாழ்த்து செய்தி
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, சமூக வலை தளத்தில் நேற்று வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார் அமித் ஷா. அதில் அவர் கூறியுள்ளதாவது:'ஆத்மநிர்பர்' எனப்படும் சுயசார்பு என்பது உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமல்ல. மொழிகளிலும் சுயசார்பு வேண்டும். தாய் மொழியுடன், அலுவல் மொழியையும் கற்றால் சுயசார்பை நிச்சயம் அடைய முடியும்.ஹிந்தி தினத்தில், மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அனைத்து பணிகளிலும், வேலைகளிலும், தாய்மொழியுடன், அலுவல் மொழியான ஹிந்தியையும் பயன்படுத்த வேண்டும்.நாட்டில் ஒற்றுமைஹிந்தியில் பேசுவதற்கு சங்கடப்படும், கூச்சப்படும் காலம் இருந்தது. சர்வதேச அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி ஹிந்தியில் தான் பேசுகிறார்.
நம் பண்டைய கலாசாரத்தையும் நவீன வளர்ச்சியையும் ஹிந்தி இணைக்கிறது. நாட்டில் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE