சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

Added : செப் 14, 2021
Share
Advertisement
கரூர் - மோகனூர் சாலையில் அரசு காலணி பகுதியில் கரூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகிறது. டன் கணக்கில் கொட்டப்படும் அந்த குப்பை கிடங்கில் மலை போல் காட்சியளிக்கிறது. அதில் நேற்று மாலையில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீயானது காற்றின் வேகம் காரணமாக
கரூர் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

கரூர் - மோகனூர் சாலையில் அரசு காலணி பகுதியில் கரூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டு வருகிறது. டன் கணக்கில் கொட்டப்படும் அந்த குப்பை கிடங்கில் மலை போல் காட்சியளிக்கிறது. அதில் நேற்று மாலையில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீயானது காற்றின் வேகம் காரணமாக மள மளவென பரவி தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களும், புகழூர், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா 1 தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரிகள் மூலமும், தனியார் தண்ணீர் லாரிகள் மூலமும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் நகராட்சி, தீயணைப்பு துறை பணியாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஒரு சில வாகனங்கள் அப்பகுதி வழியாக கடந்து செல்கின்றன. இதனால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நேற்று மாலையில் தீ பிடித்த நிலையில் மாலை 6 மணி முதல் தீயணைப்பு துறையினர் 4 பொக்லைன் இயந்திரங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள், 45 நடை தண்ணீர் லாரிகளின் தண்ணீரை பயன்படுத்தி தொடர்ந்து 26 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X