பொது செய்தி

தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையம் பாதுகாப்பு: கலெக்டர் நேரில் ஆய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக தேர்தலில் பதிவா வாக்குகளை எண்ணும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்படவுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.வாக்கு எண்ணும் மையத்தில்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஊரக தேர்தலில் பதிவா வாக்குகளை எண்ணும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்படவுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் தரைதளத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகளும் முதல் தளத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் மூன்றாம் தளத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதிகளுக்கு பதிவாகும் வாக்குகளும் என்ன படுகின்றது.இரண்டாம் தளத்தில் வாக்குகள் பிரிக்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் 8000 வாக்குகள் விதம் ஒரு மேஜை அமைத்து மொத்தம் 60 மேஜைகள் வாக்கு பிரிக்கும் அறையில் அமைக்கப்பட உள்ளது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 40 மேஜைகளும் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அறைகளில் தலா 24 மேஜையில் அமைக்கப்படவுள்ளது.

மேலும் வாக்கு சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து செல்ல தனித்தனியே பாதைகள் தடுப்புகள் கொண்டு அமைக்க வேண்டும் மற்றும் உணவுகள் கொண்டு வருவதற்கும் அவசர தேவைக்கும் தனியான பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு கேட்டுக் கொண்டார்கள்.

இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ஊரக உள்ளாட்சி தேர்தல் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது கிராம வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மையத்தில் வாக்குகள் என்னும் மையம் அமைக்கப்பட உள்ளது இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 356 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடை செய்ய 9 பறக்கும் படைகள் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் இ. கா.. ப. திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருச்சி லோகநாயகி ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் திருக்குமார் வருவாய் கோட்டாட்சியர் திரு சிவராசு துணை காவல் கண்காணிப்பாளர் திரு புகழேந்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருக்குமார் திரு பாலாஜி வட்டாட்சியர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X