பொது செய்தி

இந்தியா

பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கடிதம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என பல்கலை மானியக்குழு கூறி உள்ளது.இது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து துணை வேந்தர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், கூறப்பட்டு உள்ளதாவது: பல்கலை., மற்றும் கல்லுாரிகளில்

புதுடில்லி:'பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்' என பல்கலை மானியக்குழு கூறி உள்ளது.

இது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து துணை வேந்தர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், கூறப்பட்டு உள்ளதாவது: பல்கலை., மற்றும் கல்லுாரிகளில் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும். இதை துணை வேந்தர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பேராசியர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொள்ளும் ஜாதி பாகுபாடு தொடர்பான புகார்களை மாணவர்கள் அளிக்க, பல்கலை., மற்றும் கல்லுாரிகள் தங்கள் இணைய தளத்தில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.பதிவாளர் மற்றும் முதன்மை அலுவலர் அலுவலகங்களில் புகார் புத்தகமும் வைக்கப்பட வேண்டும்.

இது போன்ற புகார்களை விசாரிக்க, பல்கலைக் கழகங்கள் தனி குழுவை அமைக்கலாம். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X