பொது செய்தி

தமிழ்நாடு

ஜனவரிக்குள் 'அனைத்து மக்கள் நல திட்டங்களும் ஆன்லைனில்

Updated : செப் 16, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை :''அரசின் மக்கள் நலத்திட்டங்களை வீட்டில் இருந்தே மக்கள் பெறும் வகையிலான 'ஆன்லைன்' வசதி, வரும் ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு, 'இ - அலுவலகம்' தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
அனைத்து மக்கள் நல திட்டங்கள், ஜனவரி, ஆன்லைன்,வசதி'

சென்னை :''அரசின் மக்கள் நலத்திட்டங்களை வீட்டில் இருந்தே மக்கள் பெறும் வகையிலான 'ஆன்லைன்' வசதி, வரும் ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும்,'' என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்னாளுமை முகமை அலுவலகத்தில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு, 'இ - அலுவலகம்' தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:


'டிஜிட்டல்' மயம்



அரசு அலுவலகங்களில், இ - அலுவலகம் என்பது, தமிழகத்தில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும்.தரவுகள் சரியாக இருந்தால் தான், அதை வைத்து சரியான முடிவு எடுக்க முடியும்.ஒளிவு மறைவில்லா தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து, தகவல் தொழில்நுட்பத் துறை செயல்பட்டு வருகிறது.அனைத்து துறைகளிலும் உள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தே பெறுவதற்கான வசதி, 2022 ஜனவரிக்குள் ஏற்படுத்தப்படும். தலைமை செயலகம் முழுதும் ஜனவரிக்குள் 'டிஜிட்டல்' மயமாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


பாதிப்பு



நிதித் துறை அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:தகவல்களை நிரந்தரமாக அழியாமல் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.தரவுகள் கணினிமயமாகும் போது, அவை நிரந்தர மானதாக இருக்கும். தமிழகத்தில், 'இ -- பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டதால், வரலாற்றில் இல்லாத வகையில், அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் கையிலும் முழு தகவல்களும் உள்ளன.நிதித் துறையில் 100 சதவீதம் முக்கியமானது தகவல் மட்டுமே.

நிர்வாக மேலாண்மைக்கு கணினி மயமாக்கல் மிகவும் அவசியம்.இது போன்ற அடிப்படை வசதி இல்லையெனில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், மின்னாளுகை ஆலோசகர் டேவிதார், மின்னாளுமை முகமை இயக்கக தலைமை செயல் அலுவலர் விஜயேந்திர பாண்டியன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் உட்பட பலர் பங்கேற்றனர்.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamurthy N - Chennai,இந்தியா
15-செப்-202121:51:53 IST Report Abuse
Ramamurthy N சென்னையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இலவசமாக கணினி மூலம் எடுக்கும் வசதி உள்ளது. இதனை மற்ற மாவட்டங்களிலும் ஏற்படுத்துங்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு கிராமத்திலும் கிடைக்கும் வசதியை உண்டாக்குங்கள்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-செப்-202116:50:35 IST Report Abuse
நக்கீரன் பாராட்டுக்கள். எல்லா சேவைகளையும் மின்னணுமயமாக்கினால் மட்டும் போதாது. சேவைகள் எல்லாவற்றிக்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். இல்லாவிட்டால் பயனில்லை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-செப்-202110:04:55 IST Report Abuse
RajanRajan இன்னாது லஞ்சம் கொடுக்காம ஆன்லைன் அரசு திட்டமோ. என்ன இது திருகுவளைக்கு வந்த சோதனை. அதெப்படி மொத்த கணினியையும் முடக்கி வச்சு வரலாறு படைச்சு துட்டு அடிச்சுருவோமில்லே. ஹீ ஹீ ஹீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X