சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் வி.ஏ.ஓ வீட்டில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலூர்: பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செண்பகவல்லி ரூ 8000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள செண்பகவல்லி வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நண்டுக்குழி சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் அரிகிருஷ்ணன்,49; இவரது நிலத்திற்காக

கடலூர்: பண்ருட்டி அருகே காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செண்பகவல்லி ரூ 8000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். பண்ருட்டி எல்.என்.புரத்தில் உள்ள செண்பகவல்லி வீட்டில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 12 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நண்டுக்குழி சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் அரிகிருஷ்ணன்,49; இவரது நிலத்திற்காக பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்தார். மனுவை பெற்ற வி.ஏ.ஒ.,செண்பகவள்ளி,38; பட்டா மாற்றத்திற்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.அலுவலகத்தில் அரிகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிந்து, ஒரு கவரில் ரூ.8000 போட்டு அரிகிருஷ்ணனிடம் கொடுத்தனர்.

அதன்படி காட்டுக்கூடலுார் அலுவலகத்தில் வி.ஏ.ஒ.,செண்பகவள்ளியை காலை சந்தித்து பணத்தை அரிகிருஷ்ணன் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜாமெல்வின்சிங் தலைமையில் வி.ஏ.ஒ.,வை கைது செய்து கடலுார் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X