பொது செய்தி

தமிழ்நாடு

பெத்த மனம் கல்லு... குழந்தையை தவிக்க விட்ட தாய்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஒன்பது மாத, ஆண் குழந்தையை, ஏ.டி.எம்., முன் தவிக்க விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், தலைமை தபால் நிலைய ஏ.டி.எம்., முன் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக நடந்து சென்ற ஒருவர், குழந்தையை எடுத்து சென்று, வடக்கு மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., கலாவதியிடம் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணை நடத்திய போது

திருப்பூர்:ஒன்பது மாத, ஆண் குழந்தையை, ஏ.டி.எம்., முன் தவிக்க விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், தலைமை தபால் நிலைய ஏ.டி.எம்., முன் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவ்வழியாக நடந்து சென்ற ஒருவர், குழந்தையை எடுத்து சென்று, வடக்கு மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., கலாவதியிடம் ஒப்படைத்தார்.போலீசார் விசாரணை நடத்திய போது யார் குழந்தையை விட்டு சென்றனர் என்பது தெரியவில்லை. அப்பகுதியிலுள் சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர், குழந்தையை ஏ.டி.எம்., வாசலில் படுக்க வைத்து விட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரிந்தது.அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையை திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, குழந்தைகள் வார்டில் போலீசார் சேர்த்தனர். குழந்தை குறித்த தகவல் தெரிந்தால், 94981 77769 என்ற எண்ணில் அழைக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X