சிறுமியின் வயது என்ன: உச்ச நீதிமன்றத்தில் குழப்பம்

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுமியின் வயது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளதால், அவருடைய வயதை உறுதி செய்யும் பரிசோதனை நடத்தும்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஆட்கொணர்வு வழக்குஉத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஜூலை 8ம் தேதி காணாமல் போனார். அவரை யாரோ கடத்திச் சென்றதாக பெற்றோர்

புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுமியின் வயது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளதால், அவருடைய வயதை உறுதி செய்யும் பரிசோதனை நடத்தும்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


ஆட்கொணர்வு வழக்கு



உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சிறுமி, கடந்த ஜூலை 8ம் தேதி காணாமல் போனார். அவரை யாரோ கடத்திச் சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.இது தொடர்பாக, அச்சிறுமியின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கையும் தொடர்ந்தனர்.

இந்நிலையில், டில்லி போலீசார் சமீபத்தில் அந்த சிறுமியை மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் மீட்டனர். அவரைக் கடத்திச் சென்ற நபரையும் கைது செய்தனர்.அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. தான் கடத்தப்படவில்லை; திருமணம் செய்துள்ளதாக அந்த சிறுமி கூறியுள்ளார். பெற்றோருடன் செல்லவும் மறுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அந்த சிறுமிக்காக நீதிமன்றம் நியமித்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் கூறியுள்ளதாவது:ஆதார் அட்டையின்படி, இந்த சிறுமிக்கு 13 வயதாகிறது. தனக்கு 17 வயதாவதாக அந்த சிறுமி கூறிஉள்ளார். ஆனால், 15 வயதுதான் இருக்கும் என, பெற்றோர் கூறுகின்றனர்.

மேலும், கர்ப்பமாக இருப்பதாக சிறுமி கூறுகிறார்.முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளும் அதை தெரிவிக்கின்றன.பரிசோதனைஇவர் சிறுமி தான் என்பது உறுதியானால், அவர் செய்ததாக கூறப்படும் திருமணம் செல்லாது. மேலும், கர்ப்பத்தை கலைப்பது குறித்தும் முடிவு செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து, சிறுமியின் வயதை நிர்ணயிக்கும் பரிசோதனையை செய்து 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-செப்-202103:34:39 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN என்னங்க வேடிக்கை பிறப்பு இறப்பு பதிவேடு அம்மாநிலத்தில் கையாளப்படவில்லையா..இன்னும் என்னென்ன கூத்துகள் நாட்ல நடந்தேறபோகிறதோ கலப்பின திருமணத்தால் அதை அரசு ஊக்குவித்ததால் மரபணுவுக்கு ஆதரவு தருவதால் நாட்டில் எல்லாம் போலியாகி சீர்கேடு அடைந்துவிட்டததுங்கோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X