சிறுமியை சீண்டி கொன்ற கொடூரனுக்கு துாக்கு

Added : செப் 14, 2021
Share
Advertisement
ராஜ்நந்த்காவ்ன்:சத்தீஸ்கரைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு, துாக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் கொர்ராம், 28. இவரது வீட்டருகே வசித்து வந்த மூன்றரை வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல்

ராஜ்நந்த்காவ்ன்:சத்தீஸ்கரைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு, துாக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சத்தீஸ்கரின் ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் கொர்ராம், 28. இவரது வீட்டருகே வசித்து வந்த மூன்றரை வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தன் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ளார். 'போக்சோ'இந்த வழக்கில், சேகர் கொர்ராமை போலீசார் கைது செய்தனர்.

'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.போக்சோ சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையின் இறுதியில், தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறப்பு நீதிபதி சைலேஷ் சர்மா உத்தரவிட்டதாவது:

மிகக் கொடூர குற்றத்தை புரிந்துள்ள குற்றவாளி மீது இரக்கம் காட்ட முடியாது. மனிதகுலமே வெட்கி தலைகுனியும்படியான குற்றத்தை அவர் புரிந்து உள்ளார். குற்றவாளிக்கு மறுசீரமைப்போ, மறுவாழ்வோ அளிக்க இந்த சமூகத்தில் இடமில்லை.ஒருவேளை பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி உயிருடன் இருந்தால், இந்த கொடூர செயல் அவரது வாழ்வை மட்டுமின்றி, ஆன்மாவையும் சேர்த்து கொன்றுவிடும்.


கடுமையான தண்டனை



வாழ்நாள் முழுதும் அந்த வலியை அவர் சுமக்க நேரிடும்.இது போன்ற சம்பவங்கள் சாதாரண குடிமக்களை அச்சம் அடைய செய்கின்றன. தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ள வைக்கின்றன.இது போன்ற கொடூர குற்றங்கள் புரிவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அவர்களை கடுமையாக தண்டிப்பதன் வாயிலாக சமூகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X