பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்...பஞ்., தலைவர் பதவி ஏலம் ஆரம்பம்

Updated : செப் 15, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் துவங்கியுள்ளது.தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று முதல் வரும் 22ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாதி பலம் வேலுார் மாவட்டத்தில் 247, ராணிப்பேட்டை 288, திருப்பத்துார் மாவட்டத்தில் 208 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு
ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்...பஞ்., தலைவர் பதவி ஏலம் ஆரம்பம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஏலம் துவங்கியுள்ளது.தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று முதல் வரும் 22ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜாதி பலம்வேலுார் மாவட்டத்தில் 247, ராணிப்பேட்டை 288, திருப்பத்துார் மாவட்டத்தில் 208 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும்.கட்சி சார்பில் போட்டியிட முடியாது என்பதால் பணம், ஜாதி பலம் உள்ளவர்கள் தான் போட்டியிடுவர். இதனால், பல ஊராட்சிகளில் ஏலம் விட்டு, பதவிகளை வழங்குகின்றனர். ஏலம் எடுத்தவர்கள், அந்த பணத்தை நாட்டாமையிடம் கொடுத்து விட வேண்டும். 20 சதவீதம் கமிஷன் போக, மீத தொகை போட்டியில் இருந்து விலகி கொள்பவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் 10 முதல் 25 லட்சம் ரூபாய் வரை, 50க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இதை படம் எடுக்க சென்ற பத்திரிகை, 'டிவி', மீடியாக்கள் சில இடங்களில் விரட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் கூறியதாவது:முன்பு வளர்ச்சி திட்டங்களுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தான், 'செக்' கொடுத்து வந்தனர். தற்போது பஞ்சாயத்து தலைவர்களுக்கே, 'செக் பவர்' கொடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்படுகிறது.இதனால், தேர்தலில் செலவழித்த பணத்தை ஆறு மாதத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் சம்பாதித்து விடுவர். இதனால், ஏலம் தொகை பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


சர்ச்சில் கூட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலப்பாடி ஊராட்சியில் சவரியார் பாளையம் கிராமம் உள்ளது. இங்கு கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கின்றனர்; 1,200 ஓட்டுகள் உள்ளன.நேற்று மாலை 3:00 மணியளவில் சவரியார் அதிதுாதர் ஆலய வளாகத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் கூடினர். அப்போது, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பியவர்களை வரவழைத்து தலைவர் பதவியை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்டனர்.ஏலத்தொகை அதிகம் எனக் கூறி பலரும் ஏற்கவில்லை. 'இன்று காலை 10:00 மணியளவில் மீண்டும் ஏலம் நடைபெறும்' என தெரிவித்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raguram - madurai,இந்தியா
15-செப்-202116:02:40 IST Report Abuse
raguram கட்சிகளுக்குள் ஏலம் எடுக்கபட்ட பஞ்யாத்து தலைவர் ,சேவை தேவையா இல்லையா எனபதை வாக்கெடுப்பு நடத்தபட வேண்டும். தேரதல் ஆணயமும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
15-செப்-202114:02:39 IST Report Abuse
radha மோடிஜி அமிட் ஜீ நாட்டை ஏலம் போடுறாங்க. இவங்க பதவியை ஏலம் போடுறாங்க. இவங்களும் சாங்கி குரூப்பாத்தான் இருப்பாங்க.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-செப்-202108:46:19 IST Report Abuse
VENKATASUBRAMANIAN கொள்ளையடிப்பதற்கு ஏலம் விடும் நாடு நம்நாடு. காலத்தின் கோலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X