அறிவிப்பு, தடுப்பு அமைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு, தடுப்பு அமைப்பு 

Added : செப் 14, 2021
Share
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட சாலைகள் ஓரம், கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.எச்சரிக்கை அறிவிப்பின்றி, தடுப்புகள் இன்றி, சாலையோரம் பள்ளம் எடுத்து கட்டுமான கம்பிகள் செங்குத்தாக நிற்க வைத்தபடி பணிகள் நடைபெற்று வந்தன.இதனால் அவ்வழியாக கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட சாலைகள் ஓரம், கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எச்சரிக்கை அறிவிப்பின்றி, தடுப்புகள் இன்றி, சாலையோரம் பள்ளம் எடுத்து கட்டுமான கம்பிகள் செங்குத்தாக நிற்க வைத்தபடி பணிகள் நடைபெற்று வந்தன.இதனால் அவ்வழியாக கடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் கடந்து சென்றனர்.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால், தற்போது, பணி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X