குதிரை கழிவுகளில் வளமான பயிர் பெறலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குதிரை கழிவுகளில் வளமான பயிர் பெறலாம்

Added : செப் 14, 2021
Share
இயற்கை விவசாயத்தில், குதிரைக்கழிவுகளின் அவசியம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி இயற்கை பண்ணை விவசாயியுமான எம்.பாரதி கூறியதாவது:நான் வைத்திருக்கும் நிலம், கூழாங்கல் கலந்த செம்மண் வகை. நிலத்தை பண்படுத்திய பின் பலவித பழச்செடிகளை வைத்து வருவாய் ஈட்டுகிறேன்.இயற்கை விவசாயம் செய்வதால் ஆடு, மாடு,

இயற்கை விவசாயத்தில், குதிரைக்கழிவுகளின் அவசியம் குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி இயற்கை பண்ணை விவசாயியுமான எம்.பாரதி கூறியதாவது:நான் வைத்திருக்கும் நிலம், கூழாங்கல் கலந்த செம்மண் வகை. நிலத்தை பண்படுத்திய பின் பலவித பழச்செடிகளை வைத்து வருவாய் ஈட்டுகிறேன்.இயற்கை விவசாயம் செய்வதால் ஆடு, மாடு, கோழி, பன்றி, கழுதை, ஒட்டகம், குதிரை ஆகிய விலங்குகளின் எச்சங்களை பயிர்களுக்கு செலுத்துகிறேன்.அதிலும் கழுதையின் எச்சத்தைவிட, குதிரையின் கழிவுகளில் சத்துக்கள் அதிகம் இருப்பதால், பழச்செடிகளின் வேர்களுக்கு கோடை வறட்சியையும் தாங்கி, வளமான பழங்கள் பெற முடிகிறது.கோடை மற்றும் மழைக்காலங்களிலும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், பழப்பண்ணை அமைத்திருப்பதால், அரசின் பசுமை தர சான்று கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 93805 33376

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X