பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய குழு கூட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.கூட்டத்தில், வழக்கம் போல் வரவு - செலவு கணக்குகள் முதலில் வாசிக்கப்பட்டன. பின், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள கூவம் ஆற்று மேம்பாலம் வரை 6

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், நேற்று ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, துணைத் தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், வழக்கம் போல் வரவு - செலவு கணக்குகள் முதலில் வாசிக்கப்பட்டன. பின், பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள கூவம் ஆற்று மேம்பாலம் வரை 6 லட்சம் மதிப்பில், தார் சாலை மற்றும் கடம்பத்துார் ஊராட்சியில் ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் 7 லட்சம் மதிப்பில் சீரமைக்க தனியார் தொழிற்சாலைகளுக்கு கட்டட வரைபட அனுமதி என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் ஒதுக்கப்படும் வளர்ச்சி பணிகளுக்கு தங்களிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X