நடிகை கங்கணா ரணாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை, :'அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நடிகை கங்கணா ரணாவத் மீது, 'டிவி' பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக,
 நடிகை  கங்கணா ரணாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

மும்பை, :'அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நடிகை கங்கணா ரணாவத் மீது, 'டிவி' பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி அவதுாறாக கூறியதாக, திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கணா தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் , கங்கணா மீதான அவதுாறு வழக்கு, மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கணாவின் வழக்கறிஞர் 'திரைப்பட விளம்பரத்திற்காக கங்கணா சென்ற போது, அவருக்கு கொரோனா அறிகுறி தோன்றி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கணா ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார்.
இதையடுத்து, ''அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு கங்கணா நேரில் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்,'' என, நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து, வழக்கை 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
15-செப்-202111:03:55 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஓவர் வேளை நீதிபதி ஆர்.ஆர்.கான் க்கு கங்கணா ரணாவத்தை நேரில் பார்க்கணும் போல இருக்குமோ, இருக்கும் இருக்கும் , அதை விட இந்த சாதி வெறி பிடித்த பெண்ணுக்கு சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-செப்-202108:11:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN நீதிமன்றத்தை மதிப்பது சாதாரண பொதுஜனம்தான்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
15-செப்-202106:00:05 IST Report Abuse
 Muruga Vel ஜாவேத் அக்தர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கணா ஏதாவது ஒரு சாக்கு சொல்லி வருவதாக குற்றஞ்சாட்டினார்....நீதிபதி ஆர்.ஆர்.கான் எச்சரித்து....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X