மழைக்காலத்திலும் தர்பூசணி சாகுபடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்திலும் தர்பூசணி சாகுபடி

Added : செப் 14, 2021
Share
மழைக்காலங்களிலும் தர்பூசணி சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.கோவிந்தசாமி கூறியதாவது:நான் பல வித ரக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறேன். மார்கழி மற்றும் கார்த்திகை மாதங்கள், தர்பூசணி சாகுபடி செய்ய ஏற்றவை. சாதாரண தர்பூசணி ரகத்தைவிட, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற தர்பூசணிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.கோடை

மழைக்காலங்களிலும் தர்பூசணி சாகுபடி செய்வது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி டி.கோவிந்தசாமி கூறியதாவது:நான் பல வித ரக தர்பூசணி சாகுபடி செய்து வருகிறேன். மார்கழி மற்றும் கார்த்திகை மாதங்கள், தர்பூசணி சாகுபடி செய்ய ஏற்றவை. சாதாரண தர்பூசணி ரகத்தைவிட, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற தர்பூசணிக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

கோடை சீசனில் தர்பூசணி ௧ ஏக்கருக்கு, 18 டன் வரை மகசூல் எடுக்கலாம். அதே மழைக்காலங்களில், குறைந்த மகசூல் எடுக்க முடியும்.ஆனால், தர்பூசணி செடிகளில், மழை நீர் தேங்காதவாறு வயலில் வடி கால்வாய் மற்றும் செடிகள் சேதமின்றி சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.சீசன் நேரங்களில் விற்பதைவிட, மழைக்காலங்களில் வருவாய் குறைவு தான். இருப்பினும், அனைத்து காலங்களிலும் தர்பூசணி சாகுபடி செய்யலாம் என்பதே சாத்தியமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 94444 34823

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X