நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவு நீர்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பொன்னேரி : நீர்நிலைகளில் கழிவு நீர் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பாசன ஏரி 163 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏரி நீரை கொண்டு, வடக்கப்பட்டு, சிங்கிலிமேடு, தடப்பெரும்பாக்கம் கிராமங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.விவசாயத்திற்கு பயன்தரும் இந்த ஏரியில், குடியிருப்புகள்

பொன்னேரி : நீர்நிலைகளில் கழிவு நீர் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள பாசன ஏரி 163 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏரி நீரை கொண்டு, வடக்கப்பட்டு, சிங்கிலிமேடு, தடப்பெரும்பாக்கம் கிராமங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயத்திற்கு பயன்தரும் இந்த ஏரியில், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களின் கழிவு நீர் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.குடியிருப்புகளில் இருந்து, லாரி, டிராக்டர்களில் சேகரித்து கொண்டு வரும் கழிவு நீரை ஒதுக்குபுறமான இடங்களில் வைத்து, ஏரிப்பகுதியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மனித கழிவுகளுடன் இந்த கழிவு நீர் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றமும் ஏற்படுகிறது.

நீர்நிலைகளில் கழிவு நீர் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து, பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:ஏரிப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.கழிவு நீர் கொட்டும் லாரிகளை பிடித்து, காவல் துறையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X