ஆறு பயங்கரவாதிகள் கைது பாக்., சதி திட்டம் முறியடிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:மஹாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேசத்தில் ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த, அண்டை நாடான பாக்., தீட்டியிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.டில்லி போலீஸ் மற்றும் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், டில்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் ஆறு பயங்கரவாதிகள் கைது

புதுடில்லி:மஹாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேசத்தில் ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக, பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த, அண்டை நாடான பாக்., தீட்டியிருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

டில்லி போலீஸ் மற்றும் உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், டில்லி, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

இது குறித்து, டில்லி போலீசின் சிறப்பு பிரிவின் சிறப்பு போலீஸ் கமிஷனர் நீரஜ் தாக்குர் கூறியுள்ளதாவது:பண்டிகை காலத்தின்போது, நாட்டின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிர போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம்.இதில், டில்லியில் இருவர், உ.பி.,யில் மூன்று பேர் மற்றும் மஹாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர், பாக்.,கில் பயிற்சி பெற்றவர்கள்.

பாக்.,கைச் சேர்ந்த நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம், இவர்களுக்கு பண உதவி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தசரா, ராம்லீலா பண்டிகையின்போதும், உத்தர பிரதேச தேர்தலின்போதும் தாக்குதல்களை நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.இவர்களைத் தவிர, வங்கமொழி பேசும் 15க்கும் மேற்பட்டோரும், இந்த சதி திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

இவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும், தாக்குதல் நடத்த மற்றொரு குழுவை பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தனர்.இந்த சதி திட்டத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X