பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
21, 22ல் அஞ்சல் காப்பீடு மேளாகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் வரும் 21ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளா முகாம் நடைபெற உள்ளது.ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப்பயிற்சி, வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் புதிய பாலிசி எடுக்கலாம். அதேபோல், 22ம் தேதி கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், அனைத்து தரப்பினரும் பங்கேற்று, புதிய பாலிசி பெற்று

21, 22ல் அஞ்சல் காப்பீடு மேளா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் வரும் 21ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளா முகாம் நடைபெற உள்ளது.ஆசிரியர் பட்டம் மற்றும் பட்டயப்பயிற்சி, வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் புதிய பாலிசி எடுக்கலாம். அதேபோல், 22ம் தேதி கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட மேளாவில், அனைத்து தரப்பினரும் பங்கேற்று, புதிய பாலிசி பெற்று பயன்பெறலாம் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

குடவரை துர்க்கை வழிபாடு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், கடற்கரை பகுதி தாழ்வாக அமைந்து, இப்பகுதி பாறைக்குன்றில், மகிஷாசுரமர்த்தினி குடைவரை சிற்பம் உள்ளது.இதன் மேற்பகுதி, சிறிய கருவறையில் துர்க்கை எட்டு கரங்களுடன் உள்ளார். வெளிப்புறம் சிங்கங்களுடன் துாண்கள், மகிஷாசுரனை தாக்கும் சிங்கம் என அமைந்துள்ளது.கடல் நீரோட்டத்திற்கேற்ப, குடவரை குன்றை, சில மாதங்கள் கடல் சூழ்ந்து, அருகில் செல்ல இயலாது. குடவரை பகுதியிலிருந்து, சில மாதங்கள் கடல் உள்வாங்கி விலகி, மணற்பரப்பு உருவாகும். தற்போதும், கடல் உள்வாங்கியுள்ள நிலையில், பக்தர்கள், துர்க்கை சிற்பத்தில் மஞ்சள், குங்குமிட்டு வணங்குகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X