பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு காலை 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள

பாலாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு காலை 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. காலை முதல், மாலை வரை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருத்தணி: திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில், நடப்பாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, கடந்த மாதம், 26ம் தேதி முதல், இம்மாதம், 2ம் தேதி வரை முதற்கட்ட கலந்தாய்வு நடந்தது. இதில், 191 மாணவர்கள் சேர்த்தனர்.இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் துவங்கியது. இதில், பி.எஸ்சி., இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளில், 85 மாணவர்கள் சேர்த்தனர்.நேற்று, பி.காம்., பொது, பி.காம்., - சி.எஸ்., பி.பி.ஏ., - பி.ஏ. வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. இதில், 110 மாணவர்கள் சேர்ந்தனர்.இன்று, பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.காலியிடங்கள் இருந்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X