உ.பி.,யுடனான தொடர்பு பிரதமர் மோடி நெகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி.,யுடனான தொடர்பு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Added : செப் 14, 2021
Share
லக்னோ:தன் இளமை காலத்தில் உத்தர பிரதேச மாநிலத்துடனான தொடர்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அலிகரில் அமைய உள்ள ராணுவ தளவாட ஆலைகள் தொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:நான் சிறுவனாக இருந்தபோது, உத்தர

லக்னோ:தன் இளமை காலத்தில் உத்தர பிரதேச மாநிலத்துடனான தொடர்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அலிகரில் அமைய உள்ள ராணுவ தளவாட ஆலைகள் தொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

நான் சிறுவனாக இருந்தபோது, உத்தர பிரதேசம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். இங்குள்ள அலிகர் மற்றும் சீதாபுர் குறித்து மட்டுமே எனக்கு அப்போது தெரியும்.அலிகரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பூட்டு வியாபாரி குஜராத்தில் உள்ள எங்களுடைய பகுதிக்கு வருவார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் வந்து கடைகளுக்கு பூட்டுகளை விற்பனை செய்வார். அப்போது எங்களுடைய கிராமத்தில் சில நாட்கள் தங்கியிருப்பார்.

பூட்டு விற்பனையில் கிடைக்கும் பணத்தை என்னுடைய தந்தையிடம் கொடுத்து வைப்பார். ஊருக்கு திரும்பும்போது அதை மொத்தமாக வாங்கிச் செல்வார். அந்த வகையில், அலிகர் குறித்து அறிவேன். எங்களுடைய ஊரில் யாருக்காவது கண் வலி போன்ற பிரச்னை இருந்தால் சிகிச்சைக்காக சீதாபுர் செல்லும்படி கூறுவர். அந்த வகையில் சீதாபுரை அறிவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X