சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரெகுநாதபுரம் கிளை நுாலகம் பள்ளத்தால் வாசகர்கள் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் இ-சேவை மைய கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்கி வருகிறது. இதன்அருகே பக்கவாட்டு சுவரை யொட்டி பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுவதால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.2021 ஜனவரியில்அப்போதைய அ.தி.மு.க., அரசின் சார்பில் மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இ-சேவை மையத்திற்கு அருகே 8 அடி
 ரெகுநாதபுரம் கிளை நுாலகம் பள்ளத்தால் வாசகர்கள் அச்சம்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் இ-சேவை மைய கட்டடத்தில் கிளை நுாலகம் இயங்கி வருகிறது.

இதன்அருகே பக்கவாட்டு சுவரை யொட்டி பல இடங்களில் பள்ளங்கள் காணப்படுவதால் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.2021 ஜனவரியில்அப்போதைய அ.தி.மு.க., அரசின் சார்பில் மகளிர்சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இ-சேவை மையத்திற்கு அருகே 8 அடி ஆழத்தில் பத்துக்கும் மேற்பட்டபள்ளங்களை தோண்டி சற்று தொலைவில் மணலை குவித்துள்ளனர்.

சமீபத்தில் பெய்த மழைக்கு பள்ளங்களில் நீர் தேங்கியுள்ளது.ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த வாசகர்கள் கூறியதாவது:நுாலக கட்டடத்தின்பக்கவாட்டுச் சுவர்அருகில் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டி வைத்துள்ளனர். அதில் குப்பை, தேங்கும் கழிவுநீரால் கொசு உற்பத்தியாகி வருகிறது.மாவட்ட நிர்வாகம் விபத்துக்கு வழிவகுக்கும் பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X