ஆப்கனுக்கு ரூ.9,000 கோடி உலக நாடுகள் நிதியுதவி

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெனீவா:ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு கூட்டம்மேலும், ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம், ஆப்கன் - பாக்., எல்லை ஆகியவற்றில்

ஜெனீவா:ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்கு கடுமையான உணவுப் பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உயர்மட்டக் குழு கூட்டம்மேலும், ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையம், ஆப்கன் - பாக்., எல்லை ஆகியவற்றில் கூடிஉள்ளனர். இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துஉள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் முகாம்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டிஉள்ளது.

இதையடுத்து, ஆப்கன் மக்களின் துயரம் குறித்து ஆராய, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், ஐ.நா., சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஐ.நா., மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண துறையின் துணை பொதுச் செயலர் மார்டின் கிரிப்பித் பேசியதாவது:ஆப்கனில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா., அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

இது தவிர, ஆப்கன் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.உதவ முடியாதுஇந்நிலையில், ஐ.நா.,பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:ஆப்கன் மக்கள் படும் துயரம் கவலை அளிக்கிறது.

தலிபான் அரசின் தயவின்றி, ஆப்கன் மக்களுக்கு உதவ முடியாது. கடந்த 1947ம் ஆண்டு முதல் ஆப்கனில், ஐ.நா., அலுவலகம் மக்களுக்கு உதவி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, ஐ.நா., பொதுச் சபையின் 76வது உயர் மட்டக் குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு 25ம் தேதி உரையாற்ற உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
15-செப்-202105:55:03 IST Report Abuse
Milirvan மக்களுக்கு போய் சேராது.. தாலிபன்கள் ஸ்வாஹா செய்து விடுவார்கள்.. அதை விட ரொட்டி, பால் பவுடர் கொடுத்து 'யேசுராஜா' என்று கூவ முடிந்தால் அதிக பலனும் எதிர்கோஷ்டியும் உருவாகும்.. என்ன..? பச்சைகள்தான் ரொம்ப கதறுவார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X