அரசியல் செய்தி

தமிழ்நாடு

விடைபெற்றார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், பதவி காலம் முடிந்து, தமிழகத்தில் இருந்து நேற்று விடை பெற்றார். சென்னை விமான நிலையத்தில், போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித், நான்கு ஆண்டுகளாக பதவி வகித்தார். சமீபத்தில், பஞ்சாப் மாநில கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின்

சென்னை:தமிழக கவர்னராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித், பதவி காலம் முடிந்து, தமிழகத்தில் இருந்து நேற்று விடை பெற்றார்.

சென்னை விமான நிலையத்தில், போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித், நான்கு ஆண்டுகளாக பதவி வகித்தார். சமீபத்தில், பஞ்சாப் மாநில கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தின் புதிய கவர்னராக, நாகலாந்து மாநில கவர்னர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.இதையடுத்து, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க, பன்வாரிலால் புரோஹித் நேற்று காலை 8:50 மணிக்கு இண்டிகோ விமானத்தில் சண்டிகருக்கு புறப்பட்டு சென்றார். பழைய விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் பகுதியில் அவருக்கு வழியனுப்பு விழா நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பெரியசாமி, பொன்முடி, வேலு மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

அவருக்கு, விமான நிலையத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையும் கொடுக்கப்பட்டது. தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி, நாளை இரவு, டில்லியில் இருந்து சென்னை வருகிறார். இவர் வரும் 18ம் தேதி பதவியேற்பார் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X