தமிழ்நாடு

ஊக்குவிப்பு திட்டத்தில் பருத்தி ஆடைகளை...இணைத்தால் இனிக்கும்! ஏற்றுமதியாளர் சங்கத்தினர் வேண்டுகோள்

Updated : செப் 15, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், பொருள் உற்பத்தி ஊக்கத்திட்டத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு சார்பில், ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கு, மானிய திட்டங்கள்
ஊக்குவிப்பு திட்டத்தில் பருத்தி ஆடைகளை...இணைத்தால் இனிக்கும்! ஏற்றுமதியாளர் சங்கத்தினர் வேண்டுகோள்

திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், பொருள் உற்பத்தி ஊக்கத்திட்டத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மத்திய அரசு சார்பில், ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கு, மானிய திட்டங்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளன.ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், பொருள் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், 100 கோடி ரூபாய் முதலீடு செய்து, இரண்டு ஆண்டுகளில், 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு, மானிய உதவி கிடைக்கும்.மற்றொரு திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீடு செய்து, இரண்டு ஆண்டுகளில், 600 கோடிக்கு வர்த்தகம் செய்பவருக்கு, உதவி கிடைக்கிறது.

இத்திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து, சென்னையில் நேற்று கைத்தறி, துணி நுால் துறை அமைச்சர் காந்தி நேற்று கலந்தாய்வு நடத்தினார்.அதிகாரிகள், தொழில்துறையினர் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பங்கேற்று, பின்னாலடை ஏற்றுமதியாளர் நலன்காக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து ராஜா சண்முகம் கூறியதாவது:மத்திய ஜவுளித்துறை அமைச்சக பிரதிநிதிகள் முன்னிலையில், அமைச்சர் காந்தி, கலந்தாய்வு நடத்தினார். பொருள் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தில், அதிக முதலீடு செய்ய வேண்டிய நிபந்தனையால், திருப்பூர் பனியன் தொழில்துறையினர் பயன்பெற இயலாது.

பின்னலாடை உற்பத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவில் இருக்கிறது. உற்பத்தியாளர், 100 கோடி ரூபாய் முதலீடு செய்வது மிகவும் அரிதானது. எனவே, முதலீட்டு வரம்பை குறைத்து, திட்டத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.இத்திட்டம், செயற்கை நுாலிழை உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு மட்டும் பொருந்தும். திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் பயன்பெற, பருத்தி நுாலிழை, பின்னலாடைகளையும் இணைக்க வேண்டு மெனவும் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சக பிரதிநிதிகள்முன்னிலையில், அமைச்சர் காந்தி, கலந்தாய்வு நடத்தினார். பொருள் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்தில், அதிக முதலீடு செய்ய வேண்டிய நிபந்தனையால், திருப்பூர் பனியன் தொழில்துறையினர் பயன்பெற இயலாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X