பொது செய்தி

தமிழ்நாடு

குக்கிராமமாக காட்சி அளிக்கும் சீனிவாசன் நகர் அடிப்படை வசதிகளை எதிர்பார்க்கும் மக்களின் குரல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை தொண்டி ரோட்டிற்கு மிக அருகில் வளர்ந்து வரும் நகர் பகுதி சீனிவாசன், அண்ணாநகர். இங்கு 650 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இந்நகர் மக்கள், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் வசித்தபோதும் அடிப்படை வசதிகள் கிடைக்காத குக்கிராமமாக தான் காட்சி அளிக்கின்றன. ரோடு, குடிநீர், கால்வாய் வசதி கூட கிடைக்காத நிலையில் தவிப்பதாக

சிவகங்கை : சிவகங்கை தொண்டி ரோட்டிற்கு மிக அருகில் வளர்ந்து வரும் நகர் பகுதி சீனிவாசன், அண்ணாநகர். இங்கு 650 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இந்நகர் மக்கள், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் வசித்தபோதும் அடிப்படை வசதிகள் கிடைக்காத குக்கிராமமாக தான் காட்சி அளிக்கின்றன.

ரோடு, குடிநீர், கால்வாய் வசதி கூட கிடைக்காத நிலையில் தவிப்பதாக குமுறுகின்றனர்.நகர் மக்களின் குரல்எம்.ஒய்யம்மை: இவ்விரு நகரின் முக்கிய வீதிகளில் தெரு குழாய்கள் பொருத்தியுள்ளனர். ஒரே குடிநீர் மேல்நிலை தொட்டி மட்டும் இருப்பதால் போதிய குடிநீர் வினியோகம் இல்லை. மின்மோட்டார் இணைத்து குடிநீர் திருடப்படுவதால் மேடான பகுதிகளில் உள்ள தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மேலும் கூடுதல் குடிநீர் தொட்டி கட்டி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.ஜெ.மாரியப்பன்: தொண்டி ரோட்டில் இருந்து சமத்துவபுரம் வழியாக சீனிவாச நகருக்கு பனங்காடி ரோடு சந்திப்பு வரை தார் ரோடு போட்டுள்ளனர். அந்த ரோடும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

குறிப்பாக குறுக்கு தெருக்களில் சில வற்றில் மட்டுமே பேவர் பிளாக்' கற்கள் பதித்துள்ளனர். மற்ற தெருக்களில் சிமென்ட், தார், பேவர் பிளாக் ரோடு போடாததால் மழை காலங்களில் தெருக்கள் சகதியாக காட்சி அளிக்கின்றன.கே.சாவித்திரி: சீனவாசன் நகரில் உள்ள ரேஷன் கடையில் சீனிவாசன், அண்ணாநகர், ஆயுதப்படை குடியிருப்பு, முத்துநகர், குறிஞ்சி நகர் மக்கள் என 1,900 கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். தினமும் அதிக நேரம் காத்திருந்து பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க குறிஞ்சிநகர் அல்லது ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் கூடுதலாக ரேஷன் கடை திறக்க வேண்டும்.எஸ்.தேவி: இந்நகர் பகுதியில் குறைந்த அழுத்த மின் டிரான்ஸ்பார்மர் மூலம் மின் வினியோகம் செய்கின்றனர். இவ்விரு நகரிலும் வீடுகள் அதிகரித்து விட்டன. மேலும் அனைவரது வீடுகளிலும் அதிக மின்தேவை உள்ள மின்சாதனங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்நகரில் உள்ள வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. இதனால் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் சேதமாகின்றன.

கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி மின்வாரியத்தில் பல முறை மனு செய்தும் நடவடிக்கை இல்லை.பி.ஹரிபிரசாத்: சீனிவாசன், அண்ணா நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு செல்ல தெருக்களில் கால்வாய் வசதியே இல்லை. இதனால் வீடுகளுக்கு அருகே சேகரமாகும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தற்போது வீடுகளுக்கு முன் சாக்கடை கழிவு நீர் சேர சிறு தொட்டி வைத்துள்ளனர். அந்த தொட்டிகளும் சிதிலமடைந்து கழிவுநீர் ரோட்டில் ஓடுவதால் கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X