சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இஞ்சி விளைச்சலுக்கு நிழல் வலை ஏற்றது

Added : செப் 15, 2021
Share
Advertisement
நிழல்வலை குடிலில், இஞ்சி சாகுபடி செய்வது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, எச்சூர் தனியார் இயற்கை பண்ணை நிர்வாகி ஜனார்த்தனன் கூறியதாவது:செம்மண், கரிசல் மண் உள்ளிட்ட பல வித மண்ணில், இஞ்சி சாகுபடி செய்யலாம். மண் வளத்திற்கு ஏற்றவாறு, அதில் வருவாய் கொடுக்கும்.எங்கள் பண்ணையில், கிராவல் கலந்த செம்மண் நிலத்தில், நிழல்வலை குடில் அமைத்து, இஞ்சி சாகுபடி செய்துள்ளோம்.எவ்வித

நிழல்வலை குடிலில், இஞ்சி சாகுபடி செய்வது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, எச்சூர் தனியார் இயற்கை பண்ணை நிர்வாகி ஜனார்த்தனன் கூறியதாவது:செம்மண், கரிசல் மண் உள்ளிட்ட பல வித மண்ணில், இஞ்சி சாகுபடி செய்யலாம். மண் வளத்திற்கு ஏற்றவாறு, அதில் வருவாய் கொடுக்கும்.எங்கள் பண்ணையில், கிராவல் கலந்த செம்மண் நிலத்தில், நிழல்வலை குடில் அமைத்து, இஞ்சி சாகுபடி செய்துள்ளோம்.எவ்வித ரசாயன உரங்கள் இன்றி, இயற்கை உரங்களை பயன்படுத்தி இடைவெளி பாத்தி அமைத்து, இஞ்சி பயிரிட்டுள்ளேன். நீர் மற்றும் இயற்கை உர பாசனத்திற்கு, சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலமாக, நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், இஞ்சியில் கூடுதல் வருவாய்க்கு வழிவகுக்கிறது. மேலும், சூரிய உலர்த்தி மூலமாக, இஞ்சி உலர்த்தி சேமித்து விற்றால் கூடுதல் வருவாய் பார்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு:97908 25459

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X