இன்ஸ்பெக்டர் வீட்டில் டூவீலர் திருட்டு
சிவகங்கை: சிவகங்கை நளன் தெரு ஓய்வு இன்ஸ்பெக்டர் பெரியசாமி 60. இவர் ராமநாதபுரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றார்.
செப்.,7ல் வீட்டிற்கு முன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள டூவீலரை நிறுத்தியிருந்தார். அன்று இரவு 11:00 மணிக்கு இவரது டூவீலர் திருடப்பட்டுள்ளது. சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.கிராபைட் ஆலைக்குள் கிராவல் மண் கடத்தல்சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிபட்டி கிராபைட்' ஆலைக்குள் கிராவல் மண் திருட பயன்படுத்திய இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிராபைட் வளாகத்தில் செப்.,12 ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அனுமதியின்றி இயந்திரம் மூலம் கிராவல் மண் கடத்தி சென்றனர். கிராபைட் அலுவலர் வேல்முருகன் 49 புகாரின்படி சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கிறார்.