பொது செய்தி

தமிழ்நாடு

மதுராந்தகத்தில் மல்லுக்கட்டும் தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம் தனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, மரகதம் எம்.எல்.ஏ., ஆனார்.இந்த ஓரிடத்தில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்றதால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெருவாரியாக தி.மு.க., வென்றாலும், இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.காஞ்சிபுரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகம் தனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்று, மரகதம் எம்.எல்.ஏ., ஆனார்.இந்த ஓரிடத்தில் மட்டும் அ.தி.மு.க., வெற்றி பெற்றதால், ஊரக உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பெருவாரியாக தி.மு.க., வென்றாலும், இத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், மதுராந்தகம் தொகுதியை இரு மாதங்களாக சுற்றிச்சுற்றி வலம் வருவதை காண முடிகிறது.அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, தொகுதியில் தனிப்பட்ட முறையில் நிவாரணம் வழங்குதல், நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளுதல் என களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்.'சட்டசபை தேர்தலில் தவறவிட்ட இடத்தை, உள்ளாட்சி தேர்தலில் பிடித்தாக வேண்டும்' என கூறி வருகிறார்.அதேசமயம், மதுராந்தகம் தனி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாகை சூடிய அ.தி.மு..க., - எம்.எல்.ஏ., மரகதம், கட்சியினரை ஒருங்கிணைத்து, உள்ளாட்சி தேர்தல் குறித்து, தொகுதி முழுதும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைவிட உள்ளாட்சி தேர்தலில், 'தி.மு.க.,வை இன்னும் ஓங்கி அடிக்க வேண்டும். 'ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் மட்டுமின்றி, ஊராட்சி தலைவர் பதவிகளையும் நம் கட்சியினரே பெற்றாக வேண்டும். அதற்கான பணிகளில் தீவிரம் காட்டுங்கள்' என, கட்சியினரை ஊக்கப்படுத்தி வருகிறார்.மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் ஒன்றியகுழு, மாவட்டக்குழு தலைவர் பதவிகளை பெற்று, ஆளுங்கட்சிக்கு மாற்றாக, மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க.,வே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது இவரது திட்டம் என கூறப்படுகிறது.தி.மு.க., - எம்.பி., -- அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இடையே ஏற்பட்டுள்ள இந்த சவாலான போட்டியால், உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X