தனிமையில் இருக்கும் ரஷ்ய அதிபர் புடின்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மாஸ்கோ:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்த காரணத்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யா, 'ஸ்புட்னிக் - வி' என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து உள்ளது. அதிபர் புடின், கடந்த ஏப்ரலில் இரண்டாவது 'டோஸ்' ஸ்புட்னிக் - வி தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டார்.இந்நிலையில் நேற்று
 தனிமையில் இருக்கும் ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ:கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலரை சந்தித்த காரணத்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தனிமையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யா, 'ஸ்புட்னிக் - வி' என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து உள்ளது. அதிபர் புடின், கடந்த ஏப்ரலில் இரண்டாவது 'டோஸ்' ஸ்புட்னிக் - வி தடுப்பூசி மருந்தை செலுத்திக் கொண்டார்.இந்நிலையில் நேற்று முன்தினம், சிரிய அதிபர் பஷார் ஆசாத்தை புடின் சந்தித்தார். அத்துடன், பெலாரஸ் ராணுவ பயிற்சி விழா உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவற்றில், பாராலிம்பிக் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய புடின், பல நிகழ்ச்சிகளில் கொரோனா பாதித்த பலருடன் பங்கேற்ற காரணத்தால் விரைவில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, புடின் தனிமையில் உள்ளதாக, அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், புடினுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். ரஷ்யாவில், சமீப வாரங்களில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. நாள்தோறும் கொரோனாவால் 800 பேர் வரை உயிரிழக்கின்றனர். ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 லட்சம் பேரில், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 249 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X