பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:சுகாதாரத்துறை சார்பில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தில், தேசிய குடற்புழு நீக்கும் தினம், நேற்று முன்தினம் துவங்கி, 27ம் தேதி வரை நடக்க உள்ளது.கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஒன்று முதல், 19 வயது வரையுள்ள, 5.78 லட்சம் குழந்தைகள், மாவட்டத்தில், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் நீங்கலாக, 20 முதல் 30 வயது வரையுள்ள, 2.04 லட்சம் பெண்களுக்கு,

திருப்பூர்:சுகாதாரத்துறை சார்பில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தில், தேசிய குடற்புழு நீக்கும் தினம், நேற்று முன்தினம் துவங்கி, 27ம் தேதி வரை நடக்க உள்ளது.கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஒன்று முதல், 19 வயது வரையுள்ள, 5.78 லட்சம் குழந்தைகள், மாவட்டத்தில், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் நீங்கலாக, 20 முதல் 30 வயது வரையுள்ள, 2.04 லட்சம் பெண்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகளில், 27ம் தேதி வரை, மாத்திரைகள் வழங்கப்படும். ஒன்று முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, 'அப்பெண்டசோல்' அரை மாத்திரை வழங்கப்படும். இரண்டு முதல், 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 முதல், 30 வயது வரையுள்ள பெண்கள், ஒரு மாத்திரை எடுத்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில், பள்ளி குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கலெக்டர் வினீத், மாத்திரைகளை வழங்கினார்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'குடற்புழு தொற்றால், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி தொந்தரவு ஏற்படும்.தொற்றில் இருந்து விடு பட, 'அல்பெண்டசோல்' மாத்திரை உட்கொள்ள வேண்டும். காலை அல்லது மதிய உணவு சாப்பிட்ட பின், அரை மணி நேரம் கழித்து, மாத்திரைகளை உட் கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X