பொது செய்தி

தமிழ்நாடு

கழிவு நீர் அடைப்பு சீரமைப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
சாலிகிராமம் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலிகிராமம் பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவு நீர் அடைப்புகளை சீரமைத்தனர்.கோடம்பாக்கம் மண்டலத்தில், வடபழநி டிப்போ துவங்கி சாலிகிராமம் ஆவிச்சி பள்ளி சிக்னல் வரை உள்ள ஆற்காடு சாலை; சாலிகிராமம் 129வது வார்டு, காவேரி தெரு, சத்தியமூர்த்தி தெரு, வெங்கடேஷ்வரா தெரு உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை நிரம்பி

சாலிகிராமம் : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, சாலிகிராமம் பகுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, கழிவு நீர் அடைப்புகளை சீரமைத்தனர்.

கோடம்பாக்கம் மண்டலத்தில், வடபழநி டிப்போ துவங்கி சாலிகிராமம் ஆவிச்சி பள்ளி சிக்னல் வரை உள்ள ஆற்காடு சாலை; சாலிகிராமம் 129வது வார்டு, காவேரி தெரு, சத்தியமூர்த்தி தெரு, வெங்கடேஷ்வரா தெரு உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை நிரம்பி வழிவது தொடர்கதையாக உள்ளது.இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் 'ஜெட்டர்' மற்றும் கழிவுநீரகற்றும் வாகனங்கள் உதவியுடன், பாதாளச் சாக்கடை அடைப்புகள் அகற்றப்பட்டன.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:சாலிகிராமம் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்கள், 25 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அப்போது இருந்து மக்கள் தொகைக்கு ஏற்ப, 150 எம்.எம்., விட்டம் உடைய குழாய்கள் அமைக்கப்பட்டன.ஆனால் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. மேலும், தனியார் 'கேபிள்'கள் அமைக்கும் பணியின்போது, கழிவு நீர் குழாய்கள் சேதமடைக்கின்றன.

மழைக்காலங்களில் கழிவு நீர் குழாயில், மழை நீரும் கலந்து விடுவதால், அதன் நிரம்பி வழியும் நிலை ஏற்படுகிறது.ஆற்காடு சாலை வழியாக மின் கேபிள்கள் செல்வதால், பாதாள சாக்கடையில் பணிகள் செய்வதில் சிரமம் உள்ளது. மெட்ரோ ரயில் பணிகளின்போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சாலையில் வாகனங்கள் குறைந்ததும், பாதாளச் சாக்கடையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X