பொது செய்தி

தமிழ்நாடு

435 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை

Added : செப் 15, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 435 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.தேர்தல் பணிகளில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளை தயார் செய்வது, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்ய, அந்தந்த

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 435 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6, 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.தேர்தல் பணிகளில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளை தயார் செய்வது, கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்ய, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,281 ஓட்டுச்சாவடிகள், தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.இதில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எல்லையில் மட்டும், 347 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 88 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக உள்ளன. மொத்தம் 435 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன.பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அமையும் இடத்தில், போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X