பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் களைகட்டியது விருப்ப மனு; சுடச்சுட சாம்பார், மெதுவடை

Added : செப் 15, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, வாலாஜாபாதில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட ரசம், சாம்பார் மற்றும் மெதுவடை ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன.அதை சுவைத்து ரசித்த விருப்ப மனு கொடுக்க வந்தோரிடம், காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான சுந்தர்

வாலாஜாபாத் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, வாலாஜாபாதில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட ரசம், சாம்பார் மற்றும் மெதுவடை ஆகிய உணவுகள் வழங்கப்பட்டன.அதை சுவைத்து ரசித்த விருப்ப மனு கொடுக்க வந்தோரிடம், காஞ்சிபுரம் தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.,வுமான சுந்தர் பேசியதாவது:

தலைமை கழகம் பரிந்துரைக்கும் நபருக்கு, வாய்ப்பு அளிக்கப்படும். இந்த முறை, விருப்ப மனுவுக்கு கட்டணங்கள் ஏதுவும் செலுத்த தேவையில்லை. போட்டியிட இருக்கும் ஆதிதிராவிடர்களுக்குரிய ஜாதி சான்றுகளை விரைவில் பெற்று, மனு தாக்கல் செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.வாலாஜாபாத் வட்டாரத்தில், 61 ஊராட்சி தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு போட்டியிடும் தி.மு.க.,வினரிடம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய செயலர் சேகர் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகி பூபாலன் ஆகியோர் பெயர் பட்டியல் சேகரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X