பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை தெப்பக்குளம் வரத்து கால்வாய் சீரமைக்க நடவடிக்கை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாயை சீரமைக்க எம்.எல்.ஏ., செந்தில்நாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.சிவகங்கை தெப்பக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. சமீப காலமாக தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை : சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாயை சீரமைக்க எம்.எல்.ஏ., செந்தில்நாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சிவகங்கை தெப்பக்குளம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. சமீப காலமாக தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாயில் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். தெப்பக்குளத்தின் வரத்துக்கால்வாய் பகுதியைசெந்தில்நாதன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். முட்புதர் மண்டி சுகாதாரக்கேடாக இருந்தது.நகராட்சி ஆணையாளர் அய்யப்பனிடம் செட்டியூரணியில் இருந்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு திறந்த வெளியாக இல்லாமல் மூடப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டமதிப்பீடு செய்து வழங்க தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை உடனடியாக செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X