திறந்தவெளி நிலத்தில் மரங்கள் தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறந்தவெளி நிலத்தில் மரங்கள் தொழிற்சாலைகளுக்கு 'நோட்டீஸ்'

Added : செப் 15, 2021
Share
சென்னை:'சிப்காட்' தொழிற் பூங்காக்களில் செயல்படும் தொழிற்சாலைகள், தங்கள் வசமுள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின், 'சிப்காட்' என்ற தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குகின்றன.தற்போது, தமிழகத்தில் 24 தொழில் பூங்காக்கள் மற்றும் ஆறு

சென்னை:'சிப்காட்' தொழிற் பூங்காக்களில் செயல்படும் தொழிற்சாலைகள், தங்கள் வசமுள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில் மரங்களை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின், 'சிப்காட்' என்ற தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திடம் பெறும் நிலத்தில், பெரு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குகின்றன.தற்போது, தமிழகத்தில் 24 தொழில் பூங்காக்கள் மற்றும் ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவற்றில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைச் சூழலை பேணவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

.இந்நிலையில், தொழிற்சாலைகள் வசமுள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலத்தில் மரங்கள் வளர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது:சிப்காட் தொழில் பூங்காக்களை பசுமையாக மாற்றும் நோக்கில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

சிப்காட் தொழில் பூங்காக்களில் 2,000 ஏக்கர் வரை திறந்தவெளி பொது ஒதுக்கீட்டு நிலங்கள் உள்ளன. இதுவரை 2.65 லட்சம் வளர்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டுஉள்ளன. தொடர்ந்து, மூன்று லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.மேலும், தொழிற்சாலைகள் வசம் உள்ள திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களிலும் மரங்கள் வளர்க்குமாறு, அதன் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணியும் துவங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X