முறைகேடு குழாய் இணைப்பு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, மேட்டுப்பாளையம் விரிவு பகுதியில் ஏராளமான வீதிகள் உள்ளன.அவற்றில், பல நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், 3 மற்றும் 4 ஆகிய வீதிகளுக்கு அப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இந்த இரு வீதிகளிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர், இதில் வழங்கிய 5 பொதுக்குழாய் இணைப்புகள் மூலம்
 முறைகேடு குழாய் இணைப்பு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, மேட்டுப்பாளையம் விரிவு பகுதியில் ஏராளமான வீதிகள் உள்ளன.அவற்றில், பல நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், 3 மற்றும் 4 ஆகிய வீதிகளுக்கு அப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.இந்த இரு வீதிகளிலும் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர், இதில் வழங்கிய 5 பொதுக்குழாய் இணைப்புகள் மூலம் தண்ணீர் பிடித்துப் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இவற்றில் மிகவும் குறைந்த அளவு தண்ணீர் வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த போது, போர்வெல் தண்ணீர் வழங்கும் தொட்டியிலிருந்து முனியப்பன் வீதிக்கு நேரடியாக ஒரு குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்லப்படுவதும், தனி நபர் ஒருவர் காம்பவுண்ட் வீட்டுக்கு முன் இந்த இணைப்பு கொடுக்கப்பட்டதும் தெரிந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நேற்று காலை குமார் நகர் தண்ணீர் தொட்டி வளாகத்தில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அப்பகுதியினர் கூறியதாவது:முனியப்பன் வீதியில் உள்ள தி.மு.க.,வை சேர்ந்த ஒரு நபர், தனது காம்பவுண்ட் வீட்டுக்கு வசதியாக இந்த இணைப்பை முறைகேடாக கொடுத்துள்ளார். நேரடியாக கொடுத்த இணைப்பால் மற்ற பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.ஏற்கனவே இருமுறை இது போல் இணைப்பு கொடுத்து பொதுமக்கள் எதிர்ப்பால் துண்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த முறைகேடு இணைப்பை அவராகவே செய்துள்ளார். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X