தமிழ்நாடு

ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர், வியாபாரிகள் தர்ணா

Added : செப் 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நவீன மீன் மார்க்கெட்டை நடத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஒப்பந்ததாரர், வியாபாரிகள் தர்ணா போராட்டம் செய்தனர்.ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.93 லட்சம் செலவில் நவீன மீன்மார்க்கெட் கட்டடப்பட்டுள்ளது. இங்கு 56 கடைகளுடன் மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறையும் உள்ளது. இதனை சசிக்குமார் என்பவர்
 ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர், வியாபாரிகள் தர்ணா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நவீன மீன் மார்க்கெட்டை நடத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, ஒப்பந்ததாரர், வியாபாரிகள் தர்ணா போராட்டம் செய்தனர்.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.93 லட்சம் செலவில் நவீன மீன்மார்க்கெட் கட்டடப்பட்டுள்ளது. இங்கு 56 கடைகளுடன் மீன்களை பாதுகாக்க குளிர்சாதன அறையும் உள்ளது. இதனை சசிக்குமார் என்பவர் ஆண்டுக்கு தலா ரூ.31 லட்சம் வீதம் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த ஜூலையில் நவீன மீன் மார்க்கெட் திறக்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவே வியாபாரிகள் கடை வைத்தனர்.நகரில் தனியார் மார்க்கெட் மற்றும் சாலையோரங்களில் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து மீன்விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக எதிர்பார்த்த வியாபாரம் இன்றி கடந்த 2 வாரங்களாக மீன்மார்க்கெட் பூட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஒப்பந்ததாரர் சசிக்குமார், அவரது வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

சசிக்குமார் கூறுகையில், 'நகராட்சி அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் மீன்மார்க்கெட் நடத்த முடியவில்லை. ரூ. பலஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. நகரில் உரிய அனுமதியின்றி ரோட்டோரம், கடைகளில் மீன்விற்பனை செய்கின்றனர். இவற்றை கட்டுப்படுத்தி நவீன மீன் மார்க்கெட்டில் விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக கலெக்டரிடம் புகார் அளித்தும் பலனில்லை, நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் பூட்டியுள்ளோம். ஒரு வாரத்தில்நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாவியை நகராட்சியில் ஒப்படைத்து கட்டிய பணத்தை கேட்க உள்ளோம்,'என்றார்.இவர்களுடன் நகராட்சி கமிஷனர் (பொ) நீலேஸ்வரர் பேச்சுவார்த்தை நடத்தினர், மீன் மார்க்கெட் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X