ஆப்கன் துணை பிரதமர் முல்லா பராதர் கொலை?

Added : செப் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
காபூல்:தலிபான் அமைப்புக்குள் ஏற்பட்ட சண்டையில், துணைப் பிரதமர் முல்லா பராதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட தகவலை, தலிபான் தலைவர்கள் மறுத்துஉள்ளனர்.தலிபான் பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் முல்லா அப்துல் கனி பராதர். இவர், தலிபான் அரசின் துணைப் பிரதமராக பொறுப்பேற்று உள்ளார்.மோதல்இவரது ஆதரவாளர்களுக்கும், ஹக்கானி பிரிவு
 ஆப்கன் துணை பிரதமர் முல்லா பராதர் கொலை?

காபூல்:தலிபான் அமைப்புக்குள் ஏற்பட்ட சண்டையில், துணைப் பிரதமர் முல்லா பராதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட தகவலை, தலிபான் தலைவர்கள் மறுத்துஉள்ளனர்.

தலிபான் பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் முல்லா அப்துல் கனி பராதர். இவர், தலிபான் அரசின் துணைப் பிரதமராக பொறுப்பேற்று உள்ளார்.


மோதல்

இவரது ஆதரவாளர்களுக்கும், ஹக்கானி பிரிவு தலைவர் சிராஜுதின் ஹக்கானியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இவர்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், முல்லா பராதர் சுட்டுக் கொல்லப் பட்டதாக தகவல் வெளியானது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின் அடிக்கடி ஊடகத்தில் தென்பட்ட பராதர், சமீபமாக அதிகம் தென்படவில்லை.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் சமீபத்தில் காபூல் வந்தார். அவரை அமைச்சரவை பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அதில் கூட, துணை பிரதமர் முல்லா பராதர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது மரணம் குறித்த சந்தேகம் வலுவடைந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் சுலைல் ஷாஹீன் கூறிய தாவது:துணைப் பிரதமர் முல்லா பராதர் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, குரல் வழி செய்தி வாயிலாக அவர் மறுத்துஉள்ளார்.


நிரூபிக்கப்படவில்லை

இந்த தகவல், அடிப்படை ஆதாரமற்றது. இதில் துளியும் உண்மையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காந்தகாரில் நடைபெற்ற சில அரசியல் கூட்டங்களில் முல்லா பராதர் பங்கேற்ற, 'வீடியோ' காட்சி களை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17-செப்-202108:39:48 IST Report Abuse
NicoleThomson இவரு உண்மையா ஆப்கான் மக்களுக்கு நல்லது செய்யணும்னு சொல்லியிருப்பார் பாக் தூக்கியிருக்கும் , நம்மூரு சாதிக் , அண்ணா நகர் ரமேஷ் குடும்பம் போன்று தான் உலகெங்கும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
15-செப்-202108:10:08 IST Report Abuse
Sivagiri பார்த்தா நல்ல மனுஷனா தெரியிறார் . .
Rate this:
raja - madurai,இந்தியா
16-செப்-202117:55:02 IST Report Abuse
rajaசாதாரணமா பாத்தா உலகத்துல எல்லாரும் நல்ல மனுசங்க தான். ஆனா உண்மையிலேயே இந்த உலகத்துல நல்ல மனுஷங்கன்னு யாருமே கெடயாது. அப்படி வாழ முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X