கிடப்பில் ரோடு பணி; பொதுமக்கள் அவதி

Added : செப் 15, 2021
Share
Advertisement
பல்லடம்:ரோடு பணி கிடப்பில் உள்ளதன் காரணமாக, ஆறுமுத்தாம்பாளையத்தில், தவறி விழுந்து காயமடைபவர்கள், அதிகரித்து வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் -- தொட்டி அப்புச்சி கோவில் வரை ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ரோடு தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.பணி முடிந்து மூன்று மாதங்களாகியும், அடுத்த கட்ட பணிகள் தொடராமல்
 கிடப்பில் ரோடு பணி; பொதுமக்கள் அவதி

பல்லடம்:ரோடு பணி கிடப்பில் உள்ளதன் காரணமாக, ஆறுமுத்தாம்பாளையத்தில், தவறி விழுந்து காயமடைபவர்கள், அதிகரித்து வருகின்றனர்.பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் -- தொட்டி அப்புச்சி கோவில் வரை ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ரோடு தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன.பணி முடிந்து மூன்று மாதங்களாகியும், அடுத்த கட்ட பணிகள் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதன் காரணமாக, ஏராளமானோர் ரோட்டில் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:ரோடு பணி மூன்று மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் போடப்பட்டு பணிகள் பாதியில் விடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பலர் தவறி விழுந்து காயமடைகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், இளைஞர் ஒருவர் பைக்குடன் வாய்க்காலுக்குள் தவறி விழுந்தார். அதேபோல், இன்று (நேற்று) முதியவர் ஒருவர் வாய்க்காலுக்குள் விழுந்து காயம் அடைந்தார்.எனவே, வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ள ரோடு பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X