தமிழ்நாடு

ஊரடங்கால் கோயில் ஊழியர்கள் பாதிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருவாடானை : கொரோனா ஊரடங்கால் வாரத்தில் மூன்று நாட்கள் கோயில்கள் மூடப்படுவதால் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருவாடானை தாலுகாவில் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோயில்கள் உள்ளன. இக் கோயில்களில் குருக்கள், ஸ்தானிகர், முத்திரைகணக்கு, தேர் சிற்ப ஆசாரி, கொத்தனார்,துாய்மை பணியாளர் ஆகியோர் நீண்ட காலமாக சம்பளம் இல்லாத சிப்பந்திகளாக

திருவாடானை : கொரோனா ஊரடங்கால் வாரத்தில் மூன்று நாட்கள் கோயில்கள் மூடப்படுவதால் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

திருவாடானை தாலுகாவில் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோயில்கள் உள்ளன. இக் கோயில்களில் குருக்கள், ஸ்தானிகர், முத்திரைகணக்கு, தேர் சிற்ப ஆசாரி, கொத்தனார்,துாய்மை பணியாளர் ஆகியோர் நீண்ட காலமாக சம்பளம் இல்லாத சிப்பந்திகளாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் இழப்பீட்டு தொகையாக 600 முதல் 800 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வெள்ளி, செவ்வாய் மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்களால் வழங்கப்படும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்துகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து ஊழியர்கள் கூறியதாவது:இந்த மூன்று நாட்களில் தான் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த நாட்களில் கோயில் மூடப்பட்டிருப்பதால் வருமானம் இழந்து தவிக்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X