பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகள் கைவண்ணத்தில் தபால் கவர்  அரசு அலுவலகங்களுக்கு இலவசம் அரசு அலுவலகங்களுக்கு இலவசம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் தயாரித்த காகித தபால் கவர், பேண்டேஜ் துணிகள் அரசு அலுவலகம், மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், தென் மாவட்ட அளவில் உள்ள கிளை சிறை அலுவலர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களுக்கு காகித தபால் கவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப, துணை சுகாதார


சிவகங்கை : மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள் தயாரித்த காகித தபால் கவர், பேண்டேஜ் துணிகள் அரசு அலுவலகம், மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், தென் மாவட்ட அளவில் உள்ள கிளை சிறை அலுவலர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களுக்கு காகித தபால் கவர்கள் மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப, துணை சுகாதார நிலையத்திற்கு தேவையான பேண்டேஜ்' துணி விபர பட்டியல் சேகரித்து அனுப்ப வேண்டும் என்றும், இவர்களுக்கு தேவைக்கு ஏற்ப இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறை கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது, அலுவலக பணிகள் கம்ப்யூட்டர் மயமானாலும் பதிவு தபால் உள்ளிட்ட முக்கிய தபால்கள் அனுப்ப தபால் கவர் தேவை என்பதற்காக தயாரித்து வழங்குகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X