பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில்  5 பவுனுக்கு கீழ் கடன் பெற்றவர்கள் 84 ஆயிரம் பேர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 84 ஆயிரம் பேர் வரை 5 பவுனுக்கு கீழ் நகைக்கடனாக 298 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதில் தள்ளுபடி யாருக்குகிடைக்கும், என்ற கேள்வி எழுந்துள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியானவருக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும், என அரசு தெரிவித்துள்ளது. தகுதியான நபர்கள் என்பது அரசு விதிகளின்படி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 84 ஆயிரம் பேர் வரை 5 பவுனுக்கு கீழ் நகைக்கடனாக 298 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.

இதில் தள்ளுபடி யாருக்குகிடைக்கும், என்ற கேள்வி எழுந்துள்ளது.கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்களில் தகுதியானவருக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும், என அரசு தெரிவித்துள்ளது. தகுதியான நபர்கள் என்பது அரசு விதிகளின்படி மிக குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் 84 ஆயிரம் பேர் 298 கோடி ரூபாய் பெற்றுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது.

ஒரு நபர் பெயரில் பல நகைக்கடன் இருந்தால் அதிகபட்சமாக ஒரு கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலை உள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் நகைக்கடன் தள்ளுபடிக்காக அரசு 6 ஆயிரம் கோடிரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.இதனால் குறைவான நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் தள்ளுபடியாகிவிடும், என கனவில் இருந்தவர்கள் தற்போது தள்ளுபடி கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X