பொது செய்தி

தமிழ்நாடு

பட்டா இருக்கு நிலத்தை காணோம்: கடுக்களூர் கிராம மக்கள் புலம்பல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : திருவாடானை அருகே கடுக்களூர் பகுதி மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில், திருவெற்றியூரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அளந்து பிரித்து தராததால் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.திருவாடானை அருகே கடுக்களூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட 40 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடநலத்துறை சார்பில் 2000ல் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா

ராமநாதபுரம் : திருவாடானை அருகே கடுக்களூர் பகுதி மக்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை சார்பில், திருவெற்றியூரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அளந்து பிரித்து தராததால் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

திருவாடானை அருகே கடுக்களூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட 40 குடும்பங்களுக்கு ஆதிதிராவிடநலத்துறை சார்பில் 2000ல் தலா 3 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ராமநாதபரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அதில், பட்டாக்குரியஇடத்தை அதிகாரிகள் அளந்து பிரித்து தரவில்லை, கருவேல மரங்கள் வளர்ந்து, இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது வேறுநபர்களுக்கு அதே இடத்தை மீண்டும் பட்டா வழங்கியுள்ளதாக கூறுகின்றனர். அதனை நீக்கம் செய்துவிட்டு 2000ல் பட்டா வழங்கிய படி அளந்து நிலத்தை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என கடுக்களூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X