பொது செய்தி

தமிழ்நாடு

பணி நேரத்தில் இறந்தவர் மனைவிக்கு இ.எஸ்.ஐ., திட்டத்தில் மாதாந்திர உதவி

Added : செப் 15, 2021
Share
Advertisement
திருப்பூர்:பணி நேரத்தில் இறந்த, பெட்ரோல் பங்க் பணியாளர் மனைவிக்கு, இ.எஸ்.ஐ., திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள, பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம், 71. கடந்த மார்ச் 5ம் தேதி, பணியில் இருந்த போது, மாரடைப்பால் இறந்தார்.பணிக்காலத்தில் உயிரிழந்ததால், இவரது
 பணி நேரத்தில் இறந்தவர் மனைவிக்கு இ.எஸ்.ஐ., திட்டத்தில் மாதாந்திர உதவி

திருப்பூர்:பணி நேரத்தில் இறந்த, பெட்ரோல் பங்க் பணியாளர் மனைவிக்கு, இ.எஸ்.ஐ., திட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள, பெட்ரோல் பங்க் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியம், 71. கடந்த மார்ச் 5ம் தேதி, பணியில் இருந்த போது, மாரடைப்பால் இறந்தார்.பணிக்காலத்தில் உயிரிழந்ததால், இவரது குடும்பத்துக்கு, தகுந்த உதவிகளை செய்ய இ.எஸ்.ஐ., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கோவை சார் மண்டல இயக்குனரின் உத்தரவுப்படி, நேற்று, பலியானவர் மனைவிக்கு, மாதாந்திர உதவி பெறும் உத்தரவு அட்டை வழங்கப்பட்டது.திருப்பூர் இ.எஸ்.ஐ., கிளையில் நடந்த நிகழ்ச்சியில், கிளை மேலாளர் திலீப், இறந்தவரின் மனைவி மலர்க்கொடிக்கு, உதவித்தொகை அட்டை வழங்கினார்.நிலுவை தொகையாக, 60 ஆயிரத்து, 467 ரூபாயும், மாதம், 10 ஆயிரத்து, 100 ரூபாய் ஓய்வூதிய உதவி பெறும் உத்தரவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், காசாளர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X